உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தகவல் அதிகாரிகளுக்கு அபராதம் ரூ.7.63 கோடி பாக்கி என தகவல்

தகவல் அதிகாரிகளுக்கு அபராதம் ரூ.7.63 கோடி பாக்கி என தகவல்

பெங்களூரு : மாநிலத்தில் தகவல் உரிமை சட்டத்தை மீறியது தொடர்பாக, பல்வேறு அதிகாரிகள் 10.08 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது. இதுவரை 2.45 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது. அரசு துறைகள், வாரியங்களின் பணிகள் குறித்து, மக்களுக்கு ஆவணங்களுடன் தகவல் தெரிவிப்பதன் மூலம், வெளிப்படையான நிர்வாகத்தை கொண்டு வரும் நோக்கில், 2005ல் தகவல் அறியும் உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், பொதுமக்கள் கேட்கும் விபரங்களை தெரிவிப்பது கட்டாயம். மக்களுக்கு விபரம் தெரிவிக்கும் வகையில், அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தகவல் உரிமை சட்டத்தின் கீழ், மக்களுக்கு தகவல் தெரிவிக்காமல் அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர். பொது மக்கள் மனுக்களை கவனிக்கவில்லை. இத்தகைய அதிகாரிகளுக்கு தகவல் அறியும் உரிமை ஆணையம், அபராதம் விதித்துள்ளது. 10,690 பொது தகவல் அதிகாரிகளுக்கு, 10.45 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஆனால் 2.45 கோடி ரூபாய் மட்டுமே, அபராதம் வசூலாகியுள்ளது. மீதம் 7.63 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. தகவல் உரிமை சட்டத்தின் கீழ், தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பாக்கி வைத்துள்ள மாவட்டங்களில், பெங்களூரு நகர் முதல் இடத்தில் உள்ளது. பெலகாவி இரண்டாவது, ராய்ச்சூர் மூன்றாவது இடத்தில் உள்ளது. மாநிலத்தில் 41,104 மனுக்களுக்கு தீர்வு தராமல் கிடப்பில் போட்டுள்ளனர். அபராதம் செலுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதை, தகவல் உரிமை ஆணையம் தீவிரமாக கருதுகிறது. அந்தந்த மாவட்டத்தில், பொது தொடர்பு அதிகாரிகள் செலுத்த வேண்டிய அபராதத்தை விரைந்து வசூலிக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு தகவல் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை