உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சிக்கபல்லாபூருக்கு அநீதி! எம்.பி., சுதாகர் ஆதங்கம்

 சிக்கபல்லாபூருக்கு அநீதி! எம்.பி., சுதாகர் ஆதங்கம்

சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர் மாவட்டத்திற்கு காங்கிரஸ் அரசு தொடர்ந்து அநீதி இழைப்பதாக, பா.ஜ., - எம்.பி., சுதாகர் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். சிக்கபல்லாபூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: சிக்கபல்லாபூர் மாவட்டத்தின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, எத்தினஹொளே குடிநீர் திட்டத்தை வேகமாக செயல்படுத்த காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பா.ஜ., ஆட்சியில் இருந்திருந்தால், இந்த நேரத்தில் பணிகள் முடிந்து மக்களுக்கு தண்ணீர் கிடைத்திருக்கும். எத்தினஹொளே திட்டத்தால் சக்லேஷ்பூர் மக்கள் மட்டுமே இப்போது பயன்பெறுகின்றனர். பைரகொண்டலுவில் தடுப்பணை கட்டப்படும் என்று காங்கிரஸ் அரசு கூறியது. இதுவரை நிலம் கையகப்படுத்தவில்லை. நீர்ப்பாசன திட்டங்களை செய்வதாக கூறி, ஓட்டு சேகரித்தனர். சிக்கபல்லாபூர் மாவட்டத்திற்கு காங்கிரஸ் அரசு தொடர்ந்து அநீதி இழைக்கிறது. மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதிலும் அலட்சியம் காட்டுகின்றனர். கர்நாடகாவிற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திராவுக்கு செல்கின்றன. முதலீடுகளை ஈர்க்க கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க மக்கள் மருந்தகங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். அதை மாநில அரசு மூடுகிறது. ஏன் இப்படி முட்டாள்தனமான முடிவு எடுக்கின்றனர் என்பது தெரியவில்லை. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று சொல்கின்றனர். தோல்வி அடைந்தால் ஓட்டுத் திருட்டு என்று கூறுகின்றனர். இவர்களை மக்கள் நம்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை