மேலும் செய்திகள்
நெல் கொள்முதல்; செங்கல்பட்டு காஞ்சிபுரம் 'டாப்'
14-Jun-2025
பெங்களூரு : தொழிலதிபர் ஒருவர், 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, 80 லட்சம் ரூபாய் வட்டி செலுத்தியுள்ளார். கந்து வட்டிக்காரர்களின் தொல்லை தாங்காமல், போலீசாரை நாடியுள்ளார்.பெங்களூரு, பனசங்கரி இரண்டாவது கிராசில் வசிப்பவர் தொழிலதிபர் அக்ஷய் அளவன்டி. இவர் புதிதாக தொழில் துவங்கும் நோக்கில், கந்து வட்டிக்காரர்கள் பிரதீப் கவுடா, பாஸ்கர் கவுடா ஆகியோரிடம், 2024ல் வார வட்டி அடிப்படையில், 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்; வாரந்தோறும் வட்டி செலுத்தினார்.அவரிடம், வட்டியாகவே 80 லட்சம் ரூபாய் வசூலித்தனர். இது போதாமல் கூடுதலாக 70 லட்சம் ரூபாய் தர வேண்டும் என, மிரட்டினர். பணம் கொடுக்க மறுத்ததால், அக்ஷய் மனைவி பெயரில் இருந்த டாடா நெக்சான் காரை பறித்து கொண்டனர். பலவந்தமாக வெற்றுத்தாளில் கையெழுத்து பெற்று கொண்டு, பணம் கேட்டு மிரட்டினர்.இதனால் மனம் நொந்த அக்ஷய், மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசாரும், பிரதீப் கவுடா, பாஸ்கர் கவுடா மீது வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கினர்.இவர்கள் முறைப்படி லைசென்ஸ் பெறாமல், வட்டித் தொழில் நடத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. தற்போது இவர்கள் தலைமறைவாக உள்ளனர். இவர்களை தேடி வருகின்றனர்.
14-Jun-2025