போலி சான்றிதழ் ஊழியரிடம் விசாரணை
தங்கவயல்: போலி மருத்துவ சான்றிதழ்களை சிலர் வழங்குவதாக, அரசு பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சுரேஷ் குமார், ராபர்ட் சன் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மருத்துவமனையின் 'குரூப் டி' ஊழியரான டி.சந்தர், 35, என்பவர் மருத்துவரின் போலி கையெழுத்திட்டு மருத்துவ சான்றிதழ்களை வழங்குவது தெரிய வந்துள்ளது. அவர் வசம் இருந்த மருத்துவமனையின் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.