உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  எம்.எல்.ஏ.,க்களுக்கு ஐபோன் சபாநாயகர் காதர் தகவல்

 எம்.எல்.ஏ.,க்களுக்கு ஐபோன் சபாநாயகர் காதர் தகவல்

பெங்களூரு: ' ' எம்.எல்.ஏ.,க்களுக்கு லேப் டாப் கம்ப்யூட்டர் அல்லது ஐபோன் வழங்க ஆலோசிக்கப்படுகிறது. இவற்றை எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்,'' என, சபாநாயகர் காதர் தெரிவித்தார். சட்டசபை கூட்டம் நேற்று காலை துவங்கிய போது, பா,ஜ., உறுப்பினர் பிரபு சவ்ஹான், ''எம்.எல்.ஏ.,க்களுக்கு லேப் டாப் அல்லது ஐ போன் வழங்க வேண்டும்,'' என்றார். இதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் காதர், ''எம்.எல்.ஏ.,க்களுக்கு லேப்டாப் அல்லது ஐபோன் வழங்கும் ஆலோசனை, எனக்கும் உள்ளது. ஆனால் அதை நீங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் பயன்படுத்தினால், ஐபோன் அல்லது லேப்டாப் கொடுக்கிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை