உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தடை செய்யப்பட்ட பட்டாசு விற்பனை ஜோர்?

தடை செய்யப்பட்ட பட்டாசு விற்பனை ஜோர்?

பெங்களூரு: தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டும், பெங்களூரு உட்பட பல இடங்களில் தடை செய்யப்பட்ட பட்டாசு விற்பனை நடந்து வருகிறது. காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில், தீபாவளி உட்பட பிற திருவிழாக்களின் போது, காற்று மாசுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மாநில அரசும் அமல்படுத்தி உள்ளது. ஆனாலும், சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை தடுக்க, மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உட்பட பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஏற்கனவே, பல இடங்களில் சோதனை நடத்தி, சட்ட விரோதமாக விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ளனர். தீபாவளி நெருங்குவதால், அதிகாரிகள் முழு வீச்சில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !