உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா? சித்துவை உசுப்பேத்தும் குமாரசாமி

உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா? சித்துவை உசுப்பேத்தும் குமாரசாமி

பெங்களூரு: ''உங்களுக்கு எதிராக வெளியாகியுள்ள 'வீடியோ'வை பார்த்து உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா,'' என, முன்னாள் முதல்வர் சித்தராமையாவை, மத்திய அமைச்சர் குமாரசாமி கேட்டுள்ளார். பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள ம.ஜ.த., கட்சி அலுவலகத்தில், கட்சியின் மாநில தலைவரும், மத்திய கனரக தொழில் துறை அமைச்சருமான குமாரசாமி, தொண்டர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அவர் பேசுகையில், ''தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த நபர் ஒருவர், ரகசிய வீடியோ எடுக்கிறார். அவர் தான் மாநிலத்தின் கண்ணியத்தை ஏலம் விடுகிறார். அந்த நபர் முதல்வர் சிவகுமாரின் ஆதரவாளர். வீடியோ எடுத்தது நான் தான் என்று அந்த நபர் பகிரங்கமாக கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நமது கட்சி தொண்டர்களை கைது செய்துள்ளனர். அரசுக்கு எதிராக போராடுவோம்,'' என்றார். பின், கட்சி அலுவலகத்தில் இருந்து நிருபதுங்கா சாலையில் உள்ள டி.ஜி.பி., அலுவலகம் வரை, குமாரசாமி, தலைவர்கள் பேரணி சென்றனர். வழியில் வைத்திருந்த இரும்பு தடுப்புகளை கீழே தள்ளினர். போலீசார், தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குமாரசாமி உள்ளிட்ட சில தலைவர்கள் மட்டும், டி.ஜி.பி., அலுவலகத்திற்குள் சென்று, டி.ஜி.பி., சலீமை சந்தித்தனர். சித்தராமையா வீடியோ வழக்கின் முக்கிய சூத்திரதாரியை கைது செய்ய கோரி மனு அளித்தனர். பின், குமாரசாமி கூறுகையில், ''வேறு வழியின்றி தான் எங்கள் மனுவை டி.ஜி.பி., ஏற்று கொண்டார். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தசரா பண்டிகைக்கு பின் போராட்டத்தை தொடருவோம். தன்னை பற்றி வெளியான வீடியோவை பார்த்து சித்தராமையாவுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா... அவர் ஏன் இன்னும் அமைதியாக உள்ளார்,'' என்றார். மைசூரில் உள்ள வீட்டில் தங்கியுள்ள சித்த ராமையாவை, நேற்று முன்தினம் இரவு சிவகுமார் சந்தித்தார். வீடியோ விவகாரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இதுபோல தசராவுக்கு வரும் அமைச்சர்களும், சித்தராமையாவை சந்தித்து வருகின்றனர்.

சித்துவுடன் சிவா சந்திப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி