உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பல மொழிகள் கற்பது நல்லது தான் மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை

பல மொழிகள் கற்பது நல்லது தான் மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை

பெங்களூரு: ''மாணவர்கள் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்வது நல்லது. அதேவேளையில், கன்னடத்தில் சிறந்து விளங்க வேண்டும்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.கோடை விடுமுறை முடிந்து நேற்று மாநிலம் முழுதும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்வி துறை சார்பில் ஆடுகோடியில் உள்ள அரசு கன்னட பள்ளியில் நடந்த திறமையான மாணவர்கள் கவுரவிப்பு நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா பங்கேற்றார். பள்ளி அறைகளை ஆய்வு செய்தார்.பின், அவர் பேசியதாவது:கன்னடம் கற்றால், குழந்தைகள் திறமையானவர்களாக மாறமாட்டார்கள் என்று கூறுவது தவறு. குழந்தைகள் அறிவியல் கல்வியை பெற்று, அறிவியலில் தரத்தை வளர்த்து கொண்டால், திறமைசாலியாக மாறுவர். அரசு பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

கன்னடம்

அதேபோன்று, மாணவர்கள் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்வது நல்லது. அதேவேளையில், கன்னடத்தில் சிறந்து விளங்க வேண்டும். திறமை என்பது யாருடைய சொத்தும் அல்ல. வாய்ப்பு கிடைத்தால் அனைவரின் திறமையும் வெளிப்படும். அனைவருக்கும் கல்வி வழங்குவது அரசின் பொறுப்பு. கல்வி, அறிவை வழங்குவது மட்டுமின்றி; ஆளுமையை வடிவமைக்கிறது. அனைவரும் கல்வி கற்பதால், நம் சுயமரியாதை அதிகரித்து, சமூகத்தில் நம்மை ஒரு சொத்தாக மாற்றுகிறது.நாடு கண்ட சிறந்த அறிஞர்களில் அம்பேத்கரும் ஒருவர். அவர் கொடுத்த அரசியல் அமைப்பை அனைவரும் பின்பற்ற வேண்டும். ஜாதி, மதம் பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதே, அவரது விருப்பமாக இருந்தது.குழந்தைகள் நல்ல ஊட்டச்சத்து பெற்றால் மட்டுமே நல்ல மாணவர்களாக மாற முடியும். இதனால் தான் நாங்கள் குழந்தைகளுக்கு முட்டை, வாழைப்பழம், கொண்டைக்கடலை, பால் கொடுக்கிறோம். கூடுதலாக நாங்கள் அரசிடம் இருந்து பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், சாக்ஸ், புத்தகங்கள் வழங்குகிறோம்.

ரூ. 725 கோடி

இம்முறை பள்ளி அறைகள் கட்ட, 725 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம். அரசு பள்ளி, தரத்தில் பின்தங்கவில்லை. கருணை மதிப்பெண் இல்லாமல், மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவதை உறுதி செய்ய கல்வி துறை முயற்சிக்கிறது. இரண்டாவது, மூன்றாவது துணை தேர்வுகளுக்கு கட்டணம் இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி