உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜெயலலிதா நகைகள் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைப்பு

ஜெயலலிதா நகைகள் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைப்பு

பெங்களூரு: கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி முன்னிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்க, வைர நகைகள், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, பெங்களூரு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில் தொடர்புடைய தங்கம், வெள்ளி, வைர நகைகள் அடங்கிய 6 டிரங்க் பெட்டிகள், 1,562 ஏக்கர் மதிப்பிலான நில ஆவணங்கள், கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g3zt934h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வழக்கு முடிந்து போன நிலையில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள், சொத்து ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கும்படி கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர், நேற்று கர்நாடகா அரசு கருவூலம் சென்றனர்.அங்கு நீதிபதி மோகன் முன்னிலையில் ஒவ்வொரு பெட்டியாக திறந்து, நகைகளை எண்ணி, மதிப்பீடு செய்யும் பணி நேற்று துவங்கியது. தமிழக உள்துறை இணை செயலர் ஹனி மேரி, லஞ்ச ஒழிப்பு எஸ். பி., விமலா ஆகியோர் உடன் இருந்தனர். அந்த வகையில் தங்கம், வைரம், வைடூரியம் என 27 கிலோ நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டன.ஜெயலலிதாவிற்கு சொந்தமான 1.2 கிலோ எடை உள்ள தங்க ஒட்டியாணம், ஒரு கிலோ எடையுள்ள தங்க கிரீடம், தங்க வாட்சுகள், தங்க வாள், தங்க கைக்கடிகாரம், 60 கிராம் எடையுள்ள தங்கப்பேனா, ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட தங்கத்தட்டு ஆகியன மதிப்பீடு செய்யப்பட்டன.அனைத்தும் சரி பார்த்து பட்டியல் தயார் செய்த நிலையில், அனைத்து நகைகள் மற்றும் ஆவணங்கள் 6 பெட்டிகளில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 27 கிலோ தங்க நகைகளுடன் தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.1,526 ஏக்கர் நிலங்கள் ஆவணங்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.இதன் பிறகு அரசு வழக்கறிஞர் கிரண் ஹாவர்கி கூறுகையில், சசிகலா அபராதமாக ரூ.20 கோடி செலுத்தி உள்ளார். வழக்கு செலவாக ரூ.7 கோடியை தமிழக அரசிடம் கேட்டு உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Gurumurthy Kalyanaraman
பிப் 15, 2025 22:15

கட்டு மரத்தின் சொத்துக்கள் எப்போது தமிழக அரசிடம் ஒப்படைக்க படும்? அதையும் கோர்ட் முடிவு செய்தால் நன்றாய் இருக்கும்.


K.Ramakrishnan
பிப் 15, 2025 21:26

1௦௦௦ ஏக்கர் நிலங்களை தமிழ்நாட்டில் வளைத்து போட்டுள்ளார் ஜெயலலிதா. அவரை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கவில்லை.இறந்துவிட்டதால் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை... என்று சுப்ரீம் கோர்ட்டே தௌிவுபடுத்தி உள்ளது. அப்படி என்றால் அவர் ஊழல்வாதி தான். இவரைத்தான் உத்தமத் தலைவி என்று ஜெயக்குமார் சொல்லி வருகிறார்.


Anantharaman Srinivasan
பிப் 15, 2025 20:57

போலீசாரிடம் பிடிபடும் கஞ்சா போன்ற போதை பொருள்களே பாதிக்கு மேல் காணமல் போய்விடுகிறது. அப்படி பட்டவர்களிடம் 27 கிலோ தங்க வைர வெள்ளி பொருட்கள்களா..??


ஆரூர் ரங்
பிப் 15, 2025 20:49

ஜெயா சேர்த்தது இவ்வளவுதான். ஆனா இதே திமுக கூட்டணியில இருக்கும் லாலு இதுக்கு மேலேயே ஆட்டையப்போட்டு நாலஞ்சு வழக்குல தண்டனையும் வாங்கியிருக்கிறார். அதுபற்றி 200 உ.பிஸ் பேசமாட்டாங்க.


என்றும் இந்தியன்
பிப் 15, 2025 20:39

சரியான தலைப்பு இது தான் : ஜெயலலிதா நகைகள் தமிழக லஞ்ச போலீசாரிடம் ஒப்படைப்பு


Ramesh Sargam
பிப் 15, 2025 20:21

இப்பொழுது அந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த நகைகளை எங்கே வைப்பார்கள்? யாரிடம் கொடுப்பார்கள்? ஒருவேளை தமிழக அரசிடம் கொடுத்தால்...? கொடுத்தால், அத்தனை சொத்துக்களையும் திருட்டு திமுக அரசு ஸ்வாஹா செய்துவிடும்.


Chinnamanibalan
பிப் 15, 2025 20:11

கடந்த 30 ஆண்டு காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களில் பலர், அரசு நிர்வாகம் கடனாளி ஆக காரணமாக இருந்தவர்கள் ஆவர். இவர்களை முறையாக கண்டறிந்து, இது போன்று சொத்துக்களை மீட்டு, அரசு கருவூலத்துக்கு திரும்ப கொண்டு வந்தால், பல லட்சம் கோடி ரூபாய் கடனில் இருந்து அரசு மீண்டு விடும்.


Oru Indiyan
பிப் 15, 2025 20:07

ஒரு கிலோ 200 கிராம் தங்கத்தில் செய்த ஒட்டியாணம்.... ஆயிரம் ஏக்கர் நிலங்கள், வைரங்கள்.. ஒரு தனி பெண்மணிக்கு இவ்வளவு சொத்தா? இவரை தலைவி என்று சொல்லிக்கொண்டு ஒரு லஞ்ச திராவிடிய கும்பல். தமிழ்நாட்டில் உள்ள இந்த லஞ்ச பேய்கள் என்று வேரோடு அழிக்கப்படுகிறதோ அன்று தான் தமிழ்நாட்டுக்கு விடுதலை, சுதந்திரம்...


RAMAKRISHNAN NATESAN
பிப் 15, 2025 19:50

சாவியை லஞ்ச ஒழிப்பு போலீசிடம் கொடுத்தாலும், மன்னரிடம் கொடுத்தாலும் ஒன்றுதான் .....


Venkataraman
பிப் 15, 2025 19:35

ஒரு கொள்ளைக்காரியிடமிருந்து கைப்பற்றிய நகைகளை இன்னொரு கொள்ளை கும்பலிடம் ஒப்படைக்க போகிறார்களா ? உருப்பட்ட மாதிரிதான்.இந்த நகைகளையும் சொத்துக்களையும் கொள்ளை கூட்டத்தினர் பங்கு போட்டுக் கொள்வார்கள். பிறகு யாரோ முகமூடி திருடர்கள் இவற்றையெல்லாம் கொள்ளையடித்துக்கொண்டு போய்விட்டதாக நாடகமாடுவார்கள். நீதிமன்றமும் அவர்களை நம்பி விடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை