மேலும் செய்திகள்
கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி சென்னைக்கு மாற்றம்
22-Apr-2025
பெங்களூரு : கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக, 2016ல் நியமிக்கப்பட்டவர் சோமசேகர். இவர் 1990ல் மைசூரு, சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் பயிற்சி பெற்றவர்.விஜயபுராவில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி; பெங்களூரில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். 2016ல் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 15ம் தேதி நடந்த உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமாரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவது குறித்தும், அடுத்து யாரை நியமிக்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டது.கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சோமசேகர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று நீதிபதி சோமசேகரை மணிப்பால் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டார்.
22-Apr-2025