உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கர்நாடகாவை பிரிக்க வேண்டும் சட்டசபையில் விவாதிக்க திட்டம்

 கர்நாடகாவை பிரிக்க வேண்டும் சட்டசபையில் விவாதிக்க திட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் தனி மாநிலம் குறித்து, பெலகாவியின் சுவர்ண விதான்சவுதாவில் நடக்க உள்ள குளிர் கால கூட்டத்தொடரில் குரல் எழுப்ப, எம்.எல்.ஏ.,க்கள் தயாராகின்றனர். கர்நாடகாவை பிரித்து, வட பகுதி, தென் பகுதி என, அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோள், பல ஆண்டுகளாக உள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பும் உள்ளது. கர்நாடகா அகண்ட மாநிலமாக இருக்க வேண்டும் என, பலரும் வலியுறுத்துகின்றனர். சில காலமாக அது பற்றி, யாரும் பேசாமல் இருந்தனர். ஆனால் இப்போது மீண்டும் தனி மாநிலம் வேண்டும் என, குரல் கொடுக்கின்றனர். பெலகாவியின், சுவர்ண விதான்சவுதாவில் நடக்கவுள்ள குளிர் கால கூட்டத்தொடரில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜு காகே உட்பட 26 எம்.எல்.ஏ.,க்கள் தனி மாநிலம் குறித்து, மாநில அரசிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளனர். இது குறித்து, வட கர்நாடக போராட்ட கமிட்டி பொது செயலர் நாகேஷ் கோலஷெட்டி கூறியதாவது: எம்.எல்.ஏ., ராஜு காகே, ஏற்கனவே ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் மற்றும் கவர்னருக்கு கடிதம் எழுதி, நீண்ட காலமாக கர்நாடகாவின் வட பகுதிக்கு ஏற்படும் அநியாயம், வளர்ச்சி பணிகளை அலட்சியப்படுத்துவது குறித்து விவரித்துள்ளார். வட மாவட்டங்களான பீதர், கலபுரகி, விஜயபுரா, விஜயநகரா, பல்லாரி, தாவணகெரே அடங்கிய தனி மாநிலம், அமைக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்திருந்தார். ஏற்கனவே ஒரு கோடிக்கும் அதிகமான மக்களிடம், கையெழுத்துடன் கருத்துகள் பெற்றுள்ளார். ராஜு காகே தலைமையிலான போராட்டத்துக்கு பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட், தார்வாட், கதக், உத்தரகன்னடா மாவட்டங்களின் எம்.எல்.ஏ.,க்கள் பலரும் கட்சி பாகுபாடின்றி ஆதரவு தெரிவித்துள்ளனர். பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., என அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும், தனி மாநிலம் கேட்கின்றனர். பெலகாவி சுவர்ணவிதான் சவுதாவில் நடக்கவுள்ள, குளிர் கால கூட்டத்தொடரில் மாநில அரசிடம் வேண்டுகோள் விடுக்க முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை