உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஐ.சி.எஸ்.சி., - ஐ.எஸ்.சி., தேர்வு தேசியத்தை முந்தியது கர்நாடகா

ஐ.சி.எஸ்.சி., - ஐ.எஸ்.சி., தேர்வு தேசியத்தை முந்தியது கர்நாடகா

பெங்களூரு: கர்நாடகாவில் ஐ.சி.எஸ்.சி., மற்றும் ஐ.எஸ்.சி., பாடத்திட்டத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதம், தேசிய அளவிலான தேர்ச்சி விகிதத்தை விட அதிகமாக உள்ளது.ஐ.சி.எஸ்.சி., பாடப்பிரிவில் 10ம் வகுப்பு, ஐ.எஸ்.சி., பாடப்பிரிவில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதை சி.ஐ.எஸ்.சி.இ., எனும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் வெளியிட்டது.கர்நாடகாவில் ஐ.சி.எஸ்.சி., 10ம் வகுப்பு தேர்வில் 29,745; ஐ.எஸ்.சி., 12ம் வகுப்பு தேர்வில் 2,442 மாணவ - மாணவியர் எழுதினர். ஐ.சி.எஸ்.சி.,யில் 89 மாணவர்களும், ஐ.எஸ்.சி.,யில் 9 மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தனர். இவர்களை தவிர, மற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.கர்நாடகாவில், 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 99.70 சதவீதம்; 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 99.63 சதவீதமாக உள்ளது. இதுவே தேசிய அளவில், முறையே 99.09 சதவீதம்; 99.02 சதவீதம் ஆகும். இதை சி.ஐ.எஸ்.சி.இ., வெகுவாக பாராட்டி உள்ளது.இது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், 'சிறந்த ஆசிரியர்கள் மூலம் சரியான நேரத்திற்குள் பாடங்கள் கற்பிக்கப்பட்டதே தேர்ச்சி விகிதம் அதிகமானதற்கு காரணம். பெங்களூரில் உள்ள பள்ளிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்கள் உள்ளனர். இது நகரத்தில் வலுவான கல்வி சூழல் இருப்பதை எடுத்து காட்டுகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி