உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடகா முதலிடம்: காங்., தம்பட்டம்

கர்நாடகா முதலிடம்: காங்., தம்பட்டம்

பெங்களூரு : தனிநபர் வருமானத்தில் நாட்டிலேயே கர்நாடகா முதலிடத்தில் இருப்பதாக, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு ஐந்து வாக்குறுதி திட்டம் தான் காரணம் என, மாநில காங்கிரஸ் தலைவர்கள் தம்பட்டம் அடித்து வருகின்றனர். லோக்சபாவில் நடந்து வரும் மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய நிதி அமைச்சகம் அளித்த பதிலில், இந்தியாவில் தனிநபர் வருமானத்தில் கர்நாடகா முதல் இடத்தில் இருப்பதாக கூறி உள்ளது. தற்போது தனி நபர் வருமானம் 2,04,065 ஆக உள்ளது. கடந்த 2014 - 2015ம் நிதி ஆண்டில் 1,05,697 இருந்த தனி நபர் வருமானம், தற்போது 93 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் கூறப்பட்டு இருந்தது. தனிநபர் வருமானம் உயர்வுக்கு காரணம், கர்நாடகா அரசு அமல்படுத்தி உள்ள, ஐந்து வாக்குறுதி திட்டங்கள் தான் காரணம் என, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட்ட தலைவர்கள் தம்பட்டம் அடிக்க ஆரம்பித்துள்ளனர். வாக்குறுதி திட்டங்களை விமர்சனம் செய்த, பா.ஜ., தலைவர்களுக்கு, மத்திய நிதி அமைச்சகமே பதிலடி கொடுத்துள்ளது என்றும் கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ