கெம்பேகவுடா ஜெயந்தி 224 தொகுதிகளுக்கும் நிதி
பெங்களூரு: ''அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் கெம்பேகவுடா ஜெயந்தியை கொண்டாட தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்,'' என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். அவரது பேட்டி: கெம்பே கவுடா எந்த சமுதாயத்தையும் சேர்ந்தவர் கிடையாது. அனைவருக்கும் அவர் பொதுவானவர். மாநிலம் முழுதும் வரும், 27ம் தேதி கெம்பே கவுடா ஜெயந்தி கொண்டாடப்படும். பெங்களூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கெம்பே கவுடா லே - அவுட்டில் விழா கொண்டாடப்படும். பெங்களூரின், 369 வார்டுகளில் விழாவை நடத்த, தலா 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும். இது போல, 224 சட்டசபை தொகுதிகளுக்கும் தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.