மேலும் செய்திகள்
சைக்கிள் ஓட்டியே கன்னட மொழி விழிப்புணர்வு
21-Sep-2025
மங்களூரு : கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள, தட்சிண கன்னடா மாவட்ட பஜ்ரங் தள் தலைவர் பாரத் கும்தேலு மீது, கோகா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவாகி உள்ளது. தட்சிண கன்னடாவின் பன்ட்வால் புது கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். மணல் வியாபாரி. கடந்த மே மாதம் 27 ம் தேதி குரியல் என்ற கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தட்சிண கன்னடா மாவட்ட பஜ்ரங் தள் தலைவர் பாரத் கும்தேலு உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவானது. பாரத் தலைமறைவானார். அவரது கூட்டாளிகள் தீபக், சந்தன், பிரித்விராஜ் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். இரு சமூகங்களுக்கு இடையில் பிரச்னை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அவர்கள் மீது 'கோகா' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செயயப்பட்டு உள்ளதாக, தட்சிண கன்னடா எஸ்.பி., அருண் கூறி உள்ளார். கோகா சட்டத்தின் கீழ் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும். இவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் போலீசுக்கு அதிகாரம் உள்ளது.
21-Sep-2025