உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கே.ஆர்.எஸ்., அணை 150வது நாளாக புல்

 கே.ஆர்.எஸ்., அணை 150வது நாளாக புல்

மாண்டியா: பெங்களூரு உட்பட பல்வேறு மாவட்ட மக்களின் உயிர் நாடியான கே.ஆர்.எஸ்., அணை நீர் இருப்பில், தொடர்ந்து 150 நாட்களாக அதிகபட்ச கொள்ளளவில் உள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணாவில் கே.ஆர்.எஸ்., அணை உள்ளது. இது மக்கள் மற்றும் விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்குகிறது. பெங்களூரு, மைசூரு, மாண்டியா உட்பட, பல மாவட்டங்களின் லட்சக்கணக்கான மக்களுக்கு, குடிநீர் வழங்குகிறது. விவசாயத்துக்கும் பயன்படுகிறது. கே.ஆர்.எஸ்., அணையில் இருந்தே, தமிழகத்துக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதிகமான மழை பெய்தால், அணை நிரம்புகிறது. காவிரி நீர்ப்பாசன பகுதிகளில், நடப்பாண்டு வழக்கத்தை விட அதிக மழை பெய்ததால், கே.ஆர்.எஸ்., அணைக்கு பெருமளவில் தண்ணீர் வந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 49.45 டி.எம்.சி., ஆகும். கடந்த 150 நாட்களாக, தொடர்ந்து இதே அளவில் தண்ணீரை தக்க வைத்து கொண்டுள்ளது. இது அரிய சாதனையாகும், இம்முறை கோடைக்காலத்தில் பெங்களூருக்கு குடிநீர் வழங்குவதில் பிரச்னை இருக்காது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை