உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ரூ.28 கோடி மதிப்பு நிலம் பெங்களூரில் மீட்பு

 ரூ.28 கோடி மதிப்பு நிலம் பெங்களூரில் மீட்பு

பெங்களூரு: பெங்களூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரசுக்கு சொந்தமான 28 கோடி ரூபாய் நிலத்தை, மாவட்ட நிர்வாகம் மீட்டது. பெங்களூரு நகர மாவட்டம் தெற்கு தாலுகாவின் பிதரஹள்ளி, காஜிசொன்னஹள்ளி, கண்ணுார், பிங்கிபுரா, சேஷகிரிபுரா, தாவரகெரே, பாகலுார், எலஹங்கா, இட்டகலாபுரா, ஹட்டுகிடஹள்ளி, சொன்னேனஹள்ளி, தாசனபுரா, பையண்டஹள்ளி ஆகிய இடங்களில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து பலர் வீடுகள் கட்டி இருப்பதும், கொட்டகை அமைத்து இருப்பதும், கலெக்டர் ஜெகதீசுக்கு தெரிந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரசு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தார். நேற்று முன்தினம் ஒரே நாளில் 8.04 ஏக்கர் ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்கப்பட்டது. இதன்மதிப்பு 27.72 கோடி ரூபாய் ஆகும். கலெக்டர் கூறுகையில், '' ஆக்கிரமிப்பு அரசு நிலத்தை மீட்கும், எங்கள் பணி தொடர்ந்து நடக்கும். மீட்கப்படும் நிலம் அரசு கணக்கில் சேர்க்கப்படும். நிலத்தை ஆக்கிரமிப்போர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ