உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு

வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு

ஆனேக்கல்: வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தையை, வனத்துறையினர் நான்கு மணி நேரம் போராட்டத்துக்கு பின், மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.பெங்களூரு, ஆனேக்கல் குன்டலரெட்டி பகுதியில் நேற்று காலை 8:00 மணியளவில் உணவு தேடி சிறுத்தை வந்தது. இதை பார்த்த பொது மக்கள், கூச்சலிட்டனர். இதனால் பயந்து போன சிறுத்தை, அங்கிருந்த வீட்டிற்குள் புகுந்தது.வீட்டிற்குள் இருந்த வெங்கடேஷ் என்பவரும், அவரது மனைவியும் சிறுத்தையை பார்த்து கூச்சலிடாமல், வெளியே ஓடி வந்து, வீட்டின் கதவை பூட்டினர். பின், போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.அங்கு வந்த பன்னரகட்டா வனத்துறையினர், வீட்டின் நுழைவு வாயிலில், கூண்டும், வலையும் விரித்து வைத்தனர். நீண்ட நேரமாகியும் சிறுத்தை வரவில்லை. இதையடுத்து, மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர்.வனத்துறையினர் ஹெல்மெட் அணிந்து, வீட்டிற்குள் சென்றனர். அங்குள்ள அறையின் படுக்கைக்கு கீழ் இருந்த சிறுத்தையை, மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். நான்கு மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ