உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முதல்வர் சித்து விரும்பினால் பாகிஸ்தான் பிரதமர் ஆகட்டும்

முதல்வர் சித்து விரும்பினால் பாகிஸ்தான் பிரதமர் ஆகட்டும்

ஹூப்பள்ளி: ''முதல்வர் சித்தராமையா விரும்பினால் பாகிஸ்தான் சென்று பிரதமராகட்டும்,'' என, பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ, பசனகவுடா பாட்டீல் எத்னால் கிண்டல் அடித்துள்ளார்.ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ், ஹிந்துக்களுக்கான கட்சி இல்லை. அது முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்டது. முதல்வர் சித்தராமையா, பாகிஸ்தான் முகவர் போல செயல்படுகிறார். அவர் விரும்பினால், பாகிஸ்தானுக்கு சென்று பிரதமர் ஆகட்டும். இதை யாரும் தடுக்கவில்லை.பிரதமர் மோடியை பற்றி பேசுவதற்கு காங்கிரசுக்கு எந்த தகுதியும் இல்லை. ரயில்வே தேர்வுகளில் தாலி, பூணுால் அணிய தடை விதித்தது தவறு. இதை செய்வோர் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.சபாநாயகர் இருக்கை முன் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை கூச்சலிடுமாறு கூறியது மாநில தலைவர் விஜயேந்திரா தான். நம் நாட்டின் சக்தியை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. நேரு காலத்தில் இருந்த இந்தியா இப்போது கிடையாது. தற்போது, உலகத்திலேயே மிக வலிமையான நாடாக திகழ்கிறது. நம்மிடம் உள்ள அணுகுண்டுகளில் நான்கை மட்டும், பாகிஸ்தான் மீது வீசினாலே போதும்.இந்த முறை பாகிஸ்தானுக்கு முடிவு கட்டப்படும். நம் நாட்டிற்கு வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் எதிரிகள் உள்ளனர். போர் நடக்கும்போது, இவர்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உண்டாகும். பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இரண்டும் அழிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !