உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது அரசியலமைப்பின் விருப்பம்

 சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது அரசியலமைப்பின் விருப்பம்

பெங்களூரு: ''சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது அரசியலமைப்பின் விருப்பம். ஆனால், சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும், அரசியலைமைப்பின் விருப்பங்கள் நிறைவேறவில்லை,'' என, முதல்வர் சித்தராமையா பேசினார். மாநில சமூக நலத்துறை சார்பில் பெங்களூரு வசந்த் நகரில் உள்ள அம்பேத்கர் பவனில், 'அரசியலமைப்பு தின விழா'வை முதல்வர் சித்தராமையா நேற்று முரசு கொட்டித் துவக்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: அம்பேத்கரின் அரசியல் அமைப்புக்கு முன் நாட்டில் எழுதப்படாத மனுநீதி நடைமுறையில் இருந்தது. மனுநீதியில் இருக்கும் மனித விரோத மற்றும் சமத்துவத்துக்கு விரோதமாக இருந்த விதிகளுக்கு, அம்பேத்கரின் அரசியலமைப்பில் இடம் இல்லை. சமத்துவமான சமூகத்தை கட்டி எழுப்புவதும், சமத்துவமின்மையை நீக்குவதும் நம் அரசியலமைப்பு சட்டத்தின் மற்றும் அம்பேத்கரின் விருப்பமாக இருந்தது. உலகில் கூட்டாட்சி, ஒற்றையாட்சி, எழுதப்பட்ட, எழுதப்படாத அரசியலமைப்புகள் உள்ளன. நம் நாட்டில் எழுதப்பட்ட அரசியலமைப்பு உள்ளது. நம் நாட்டை போன்று வேறு எந்த நாட்டிலும் ஜாதிகள், மதங்கள் இல்லை. எனவே, அம்பேத்கர் இந்நிலத்துக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியலமைப்பை கொடுத்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது அரசியலமைப்பின் விருப்பம். ஆனால், சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும், அரசியலைமைப்பின் விருப்பங்கள் நிறைவேறவில்லை. பசவண்ணர் போன்று பல பெரியவர்கள் ஜாதி அமைப்புக்கு எதிராக போராடிய பின்னரும், இன்னும் ஜாதியை விட்டுக்கொடுக்காமல் பலர் உள்ளனர். சமத்துவமின்மை இருக்கும் நாட்டில் சமத்துவம் என்பது எளிதில் கிடைக்காது. இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்