பட்டியல் பழங்குடியின வேலையில்லா இளைஞர்களுக்கு நடமாடும் உணவகம்
பட்டியல் பழங்குடியினர் நலத்துறை பெங்களூரு கம்மனஹள்ளியில், பட்டியல் பழங்குடியினர் இயக்குநரகம், மாநகராட்சி மற்றும் இத்துறையின் கீழ் உள்ள பிற அலுவலகங்களை நிர்வகிக்கும் வகையில், 50 கோடி ரூபாயில், 'ஸ்ரீ மகரிஷி வால்மீகி நிர்வாக சவுதா' கட்டப்படும் நடப்பாண்டில் தலா, 150 மாணவர்களை கொண்ட, 50 புதிய மெட்ரிக்கிற்கு பிந்தைய பட்டியல் பழங்குடியினர் விடுதிகள் துவங்கப்படும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பட்டியல் பழங்குடியின வேலையற்ற இளைஞர்களுக்கு நடமாடும் உணவகம் அமைக்க, 75 சதவீதம் நிதியுதவி அல்லது நான்கு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் இப் பிரிவு மாணவர்களின் படிக்கும் மகரிஷி வால்மிகி ஆதிவாசி ஆசிரம பள்ளியில், 119 பெண் உதவியாளர்களை நியமிக்க மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது வனப்பகுதிகளிலும், அதை சுற்றியும் வசித்து வரும் இருளர், சோலிகா, ஜெனுகுருபா, கடுகுருபா, குடியா, சித்தி மற்றும் பாதிக்கப்படக்கூடிய பட்டியல் பழங்குடி சமூகங்களுக்காக, 'கர்நாடக ஆதிவாசி மேம்பாட்டு கழகம்' நிறுவப்படும் பட்டியல் பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில், அவர்களின் குறைகள், பிரச்னைகளை கேட்க, தனி பட்டியல் பழங்குடியினர் ஆணையம் நிறுவப்படும்.