உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் தலைமை ஏட்டு சஸ்பெண்ட்

 லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் தலைமை ஏட்டு சஸ்பெண்ட்

பெங்களூரு: பயணியிடம், 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய தலைமை ஏட்டுவை, 'சஸ்பெண்ட்' செய்து, பெங்களூரின் கிழக்கு மண்டல போக்குவரத்து டி.சி.பி., உத்தரவிட்டார். பெங்களூரின், புலிகேசி நகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில், தலைமை ஏட்டாக பணியாற்றுபவர் சோமசேகர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன், வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரும்பு ஏற்றி வந்த லாரி, அந்த வழியாக வந்தது. அளவுக்கு அதிகமான சுமையை ஏற்றி வந்திருந்தும், ஏட்டு சோமசேகர் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கவில்லை. மாறாக, வழக்கு பதிவு செய்தால், நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த வேண்டி வரும் என, லாரி ஓட்டுநர் சையத் அப்ரோஜ் என்பவரை மிரட்டி, 5,000 ரூபாய் லஞ்சம் பெற்று கொண்டார். பின், லாரியை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தலைமை ஏட்டு தன்னிடம் லஞ்சம் வாங்கியதை, லாரி ஓட்டுநர் தன் மொபைல் போனில் பதிவு செய்து, உயரதிகாரிகளுக்கு புகாராக அனுப்பினார். இதை தீவிரமாக கருதிய, பெங்களூரின் கிழக்கு மண்டல போக்குவரத்து டி.சி.பி., சாஹில் பாக்லா நேற்று முன்தினம், தலைமை ஏட்டு சோமசேகரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை