மேலும் செய்திகள்
தங்கவயலில் அம்பேத்கர் விழா
15-Apr-2025
தங்கவயல்: தங்கவயலில் பழமையான வைணவ கோவில்களில், ஆண்டர்சன்பேட்டையில் உள்ள ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலும் ஒன்று. இக்கோவிலின் 125ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.நேற்று காலையில் மங்கள இசையுடன் பக்தி நிகழ்ச்சிகள் துவங்கின. புண்யாஹவசனம், கோ பூஜை, விஸ்வரூபம், நான்காம் கால நித்ய ஹோமம், நித்ய ஆராதனம், மூலமந்திர ஹோமம், மஹாபூர்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது.தொடர்ந்து விமான மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மேலுக்கோட்டே எத்திராஜ ஜீயர் நடத்தி வைத்தார். தங்கவயலில் உள்ள வைணவ கோவில்கள் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். மாலையில் வேத பிரபந்த சாத்துமுறை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத நம்பெருமாள் திருக்கல்யாண உற்சவம், சுவாமி திருவீதி உலா புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
15-Apr-2025