உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாஜி முதல்வர் சித்தராமையா கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார்

மாஜி முதல்வர் சித்தராமையா கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார்

கோலார்: முன்னாள் மத்திய அமைச்சர் ஜாலப்பா பிறந்த நாள் மற்றும் மருத்துவமனை நிறுவன தின விழா, நேற்று நடந்தது. அதில் சித்தராமையாவுக்கு, 'கவுரவ டாக்டர்' பட்டம் வழங்கப்பட்டது. விழா மேடையில் தன் பெயர் அறிவிக்கப்பட்ட போது, சித்தராமையா ஆச்சரியம் அடைந்தார்; பட்டம் பெற மறுத்தார். அதன்பின் அனைவரின் நெருக்கடிக்கு பணிந்து, பட்டத்தை பெற்றுக்கொண்டார். அதன்பின் உரையாற்றிய சித்தராமையா, 'என்னை யாரும், டாக்டர் சித்தராமையா என, அழைக்க வேண்டாம். வழக்கம் போன்று சித்தராமையா என்றே அழையுங்கள்' என, நகைச்சுவையாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ