உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அலமாட்டி அணையில் இருந்து தண்ணீர் திறக்க மாஜி கடிதம்

 அலமாட்டி அணையில் இருந்து தண்ணீர் திறக்க மாஜி கடிதம்

பெங்களூரு: விஜயபுரா மற்றும் பாகல்கோட் மாவட்டங்களின் மக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, அலமாட்டி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி, முன்னாள் அமைச்சர் சிவானந்த் பாட்டீல், மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வர் சிவகுமாருக்கு, சிவானந்த் பாட்டீல் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: அலமாட்டி அணை, தென் மேற்கு பருவமழை காலத்தில் நிரம்பவில்லை என்றாலும், வட கிழக்கு மழை காலத்தில் நிரம்பும் என்ற நம்பிக்கை உள்ளது. இது போன்று, பல முறை நடந்த உதாரணங்கள் உள்ளன. எனவே, இப்போதே அலமாட்டி அணையில் இருந்து, தண்ணீர் திறந்து விட்டால், வரும் நாட்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என, அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. அலமாட்டி அணையில், தற்போது 'டெட் ஸ்டோரேஜை' தவிர்த்து, 70 டி.எம்.டி., தண்ணீர் இருப்புள்ளது. அணை நிரம்ப மேலும், 35 டி.எம்.சி., தண்ணீர் தேவை. தென்மேற்கு பருவ மழை இன்னும் முடியவில்லை. மழை அதிகரித்து அணை நிரம்பக்கூடும். சூழ்நிலையை புரிந்து, உடனடியாக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை