உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தாசில்தாரின் உதவியாளர் என நடித்து பணம் பறித்தவர் கைது

 தாசில்தாரின் உதவியாளர் என நடித்து பணம் பறித்தவர் கைது

மாலுார்: மாலுார் தாசில்தாரின் தனி உதவியாளர் போல் நடித்து ஏமாற்றியவரை, மாலுார் போலீசார் கைது செய்தனர். மாலுார் தாலுகாவில் உள்ள தோரலக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாஹிருதீன். நவம்பர் 3ம் தேதி, தனது நிலப்பதிவேடுகளை சரி செய்ய மாலுார் தாலுகா அலுவலகத்திற்கு வந்திருந்தார். அங்கிருந்த பெங்களூரு கிராம மாவட்டம், ஆனேக்கலின் ஹைதர்பேட்டையை சேர்ந்த முபாரக், 34, தன்னை தாசில்தாரின் தனி உதவியாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். ஜாஹிருதீனின் நிலப்பதிவு வேலையை முடித்து தருவதாகவும், அதற்கு 1.5 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஜாஹிருதீனும் கேட்டத் தொகையை கொடுத்துள்ளார். ஆனால், அவர் சொன்னது போன்று வேலையை முடித்து தரவில்லை. சந்தேகமடைந்த ஜாஹிருதீன் பேரில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இம்மாதம் 10ம் தேதி மாலுார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சிறப்பு குழு அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இக்குழுவினர், பெங்களூரு சர்ஜாபூரில் முபாரக்கை கைது செய்தனர். அவரிடம் இருந்த 1.5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். முபாரக்குக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ