உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆபாச புகைப்படங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தவர் கைது

ஆபாச புகைப்படங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தவர் கைது

காடுகோடி: ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர், தன், திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்னையால், விவாகரத்து பெற்று, 2019ல் வேலை தேடி பெங்களூரு காடுகோடி வந்தார். ஸ்ரீனிவாஸ், 29, என்பவரின் டிஜிட்டல் சேவை மையத்தில் வரவேற்பாளராக பணிக்கு சேர்ந்தார். காலப்போக்கில் இவருக்கும், ஸ்ரீனிவாசுக்கும் பழக்கம் ஏற்பட்டது.அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஸ்ரீனிவாஸ் அவருடன் நெருக்கமாக இருந்து உள்ளார். அச்சமயத்தில், பெண்ணின் அந்தரங்க படங்களை தன் மொபைல் போனில் பதிவு செய்து வைத்து இருந்தார். இந்த படங்களை இணையத்தில் வெளியிடுவதாக கூறி, மிரட்டி அவரிடமிருந்து 25 கிராம் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் பறித்தார்.மேலும் பணம் கேட்டு மிரட்டி வந்தார். ஆத்திரமடைந்த அப்பெண், ஸ்ரீனிவாஸ் மீது காடுகோடி போலீசில், கடந்த சில நாட்களுக்கு முன் புகார் செய்தார். ஸ்ரீனிவாசை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை