| ADDED : நவ 21, 2025 06:13 AM
சிக்கபல்லாபூர்: பணக்கார பெண்களை வலையில் விழ வைத்து, ஆபாச படம் எடுத்து, 'பிளாக் மெயில்' செய்து பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார். சிக்கபல்லாபூர் மாவட் ட ம், சிந்தாமணி நகரில் வசிப்பவர் கிரிஷ், 28. இவர், திருமணமாகாத பணக்கார பெண்கள், விவாகரத்தான பெண்கள், தனியாக வசிக்கும் பெண்களை குறிவைத்தார். இத்தகைய பெண்களை முகநுால், இன்ஸ்டாகிராம் வழியாக அறிமுகம் செய்து கொண்டார். அவர்களை நேரில் சந்தித்து, கவர்ச்சிகரமாக பேசி வலையில் விழ வைப்பார். திருமணம் செய்து கொள்வதாக, ஆசை காட்டுவார். அவர்களுடன் ஊர் சுற்றுவதுடன், உடல் ரீதியான தொடர்பும் வைத்து க் கொள்வார். இதை அவர்களுக்கு தெரியாமல், மொபைல் போனில் பதிவு செய்து கொள்வார். அதன்பின் அப்பெண்களிடம் அதை காட்டி, பணம் கேட்பார். பணம் கொடுக்காவிட்டால், வீடியோவை குடும்பத்தினருக்கு அனுப்புவதாகவும், சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டுவார். குடும்பத்துக்கு பயந்து, பெண்கள் பணம் கொடுத்தனர். இதுபோன்று பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். இவரிடம் ஏமாந்த பல பெண்கள், சிந்தாமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன்படி நடவடிக்கை எடுத்த போலீசார், கிரிஷை நேற்று கைது செய்தனர்.