உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிறுமியை பலாத்காரம், கொலை செய்தவருக்கு துாக்கு தண்டனை

சிறுமியை பலாத்காரம், கொலை செய்தவருக்கு துாக்கு தண்டனை

கலபுரகி: பலாத்காரம் செய்து, சிறுமியை கொலை செய்தவருக்கு துாக்கு தண்டனை விதித்து, கலபுரகி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கலபுரகி மாவட்டம், ஆளந்தா தாலுகாவின் தேவந்தகி கிராமத்தில் வசிப்பவர் குண்டேராவ் ஜோப்டே, 28. இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார். 2023 ஜூலை 15ம் தேதியன்று, பணி நிமித்தமாக அருகில் உள்ள கிராமத்துக்கு சென்றிருந்தார். பணி முடிந்து ஊருக்கு செல்ல நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், புத்தகம் வாங்குவதற்காக ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். இதை கவனித்த குண்டேராவ் ஜோப்டே, சிறுமியின் வாயை பொத்தி பலவந்தமாக கரும்பு தோட்டத்துக்குள் இழுத்து சென்று, பலாத்காரம் செய்தார்.அதன்பின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை பக்கத்து வயலில் இருந்த கிணற்றில் வீசினார். சிறுமியின் உடலை பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த நிம்பர்கா போலீசார், சிறுமியின் உடலை மீட்டனர். கொலையாளியை கண்டுபிடித்து தண்டிக்கும்படி பலரும் வலியுறுத்தினர்.பல கோணங்களில் விசாரணை நடத்தி, குண்டேராவ் ஜோப்டேவை கைது செய்தனர். விசாரணையை முடித்து, கலபுரகி கூடுதல் மாவட்ட செஷன்ஸ் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.விசாரணையில் இவரது குற்றம் உறுதியானதால், இவருக்கு துாக்கு தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி யமனப்பா பம்மனகி, நேற்று மாலை தீர்ப்பளித்தார்.கொலையான சிறுமியின் குடும்பத்தினருக்கு, சட்ட ஆணையம் சார்பில் நான்கு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி உத்தரவிட்டார்.கலபுரகி மாவட்டத்தில், போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு துாக்கு தண்டனை விதித்திருப்பது, இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை