உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கள்ளக்காதலி கழுத்தறுத்து கொலை; பஸ்சில் தப்பியவர் புனேவில் கைது

 கள்ளக்காதலி கழுத்தறுத்து கொலை; பஸ்சில் தப்பியவர் புனேவில் கைது

துமகூரு: துமகூரில் கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு, புனேவுக்கு தப்பியோடியவரை, பஸ் ஓட்டுநரின் உதவியுடன், போலீசார் பிடித்தனர். துமகூரு மாவட்டம், குப்பி தாலுகாவின் ஹின்டசிகெரே கிராமத்தில் வசித்தவர் மஞ்சுளா, 38. கணவரை இழந்த இவர், மகனுடன் கிராமத்தின் பண்ணை வசித்தார். சமீபத்தில் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். மகன் தன் மனைவியின் ஊருக்கு சென்றிருந்ததால், மஞ்சுளா தனியாக இருந்தார். டிசம்பர் 1ல், இவர் கழுத்தை அறுத்து கொலையான நிலையில் கிடந்தார். அன்று காலை மைத்துனர் வந்து பார்த்த போது, மஞ்சுளா ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கொலையாளிகளை கைது செய்ய, தனிப்படை அமைக்கப்பட்டது. அதே கிராமத்தின் மது, 40, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக, குடும்பத்தினர் கூறினர். இதன் அடிப்படையில், மதுவை மொபைல் டவர் லொகேஷனை வைத்து தேடிய போது, மஹாராஷ்டிராவின் புனேவுக்கு, தனியார் பஸ்சில் செல்வது தெரிந்தது. போலீசார் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட தனியார் டிராவல் ஏஜன்சியை தொடர்பு கொண்டு, பஸ் ஓட்டுநரின் மொபைல் போன் எண்ணை கேட்டறிந்தனர். ஓட்டுநரை தொடர்பு கொண்டு, பஸ்சில் கொளையாளி பயணிக்கும் தகவலை தெரிவித்தனர். அவருக்கு சந்தேகம் எழாமல், புனேவின் வித்யாபீட போலீஸ் நிலையத்துக்கு பஸ்சை கொண்டு சென்று, அவரை போலீசாரிடம் ஒப்படைக்கும்படி கூறி, அவரது போட்டோவையும் அனுப்பினர். அதன்படி நேற்று முன்தினம் பஸ்சை, ஓட்டுநர் நேராக போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று, மதுவை ஒப்படைத்தார். துமகூரு போலீசார் நேற்று புனேவுக்கு சென்று, அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில், மதுவுக்கும், மஞ்சுளாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. மஞ்சுளாவிடம் மது கடன் வாங்கியுள்ளார். பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்தார். நவம்பர் 30 மாலை 6:30 மணிக்கு மது, மஞ்சுளா வீட்டுக்கு வந்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போது மஞ்சுளாவை கழுத்தை அறுத்து, கொலை செய்த மது, தன் வீட்டுக்கு வந்தார். மறுநாள் காலை பெற்றோரை, குனிகல்லின ஆலப்பகுட்டா மலையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு அழைத்து சென்றார். பூஜை செய்த பின், தலைமுடி காணிக்கை கொடுத்தார். பெற்றோரை வீட்டில் விட்டு விட்டு, தன் காரில் பெங்களூருகு வந்தார். அங்கு காரை விற்று விட்டு, தனியார் பஸ்சில் புனேவுக்கு புறப்பட்டதாக, விசாரணையில் ஒப்புக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி