மாம்பழம், பலாப்பழ மேளா லால்பாக் பூங்காவில் துவக்கம்
பெங்களூரு:தோட்டக்கலைத் துறை மற்றும் கர்நாடக மாம்பழ மேம்பாட்டு கார்ப்பரேஷன் ஒருங்கிணைப்பில், இன்று முதல் ஜூன் 24 வரை லால்பாக் பூங்காவில் மாம்பழம், பலாப்பழ மேளா ஏற்பாடு செய்யப்படுகிறது.கர்நாடக மாம்பழ மேம்பாட்டு கார்ப்பரேஷன் தலைவர் நாகராஜ் கூறியதாவது:இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், மக்களுக்கு கிடைக்க வேண்டும். விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், மாம்பழம், பலாப்பழ மேளா ஏற்பாடு செய்யப்படுகிறது. தோட்டக்கலைத் துறையும், கர்நாடக மாம்பழ மேம்பாட்டு கார்ப்பரேஷன் ஒருங்கிணைப்பிலும் நாளை (இன்று) முதல், ஜூன் 25ம் தேதி வரை, மாம்பழம், பலாப்பழ மேளா நடக்கவுள்ளது.பெங்களூரின் லால்பாக் பூங்காவில், மேளா நடக்கும். விவசாயிகள், பொது மக்கள் இடையே நேரடி தொடர்பு ஏற்படுத்தப்படும். மேளாவில் கோலார், ராம்நகர், சிக்கபல்லாபூர் உட்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, விவசாயிகள் பங்கேற்பர். தாங்கள் விளைவித்த மாம்பழங்கள், பலாப்பழங்களை விற்பனை செய்வர்.அல்போன்சா, மல்கோவா, பாதாமி, ரசப்புரி, தஷேரி, தோத்தாபூரி, மல்லிகா, செந்துாரம், சர்க்கரை குட்டி என, 40 முதல் 50 வகையான மாம்பழங்கள், 10 முதல் 12 ரகமான பலாப்பழங்கள் மேளாவில் இடம் பெறுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.