உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தங்கவயலில் ஜூலை 12ல் மாரத்தான் போட்டி 

 தங்கவயலில் ஜூலை 12ல் மாரத்தான் போட்டி 

தங்கவயல்: தங்கவயலில், 'பெஸ்ட்' என்ற பியாண்ட் எக்ஸலன்ஸ் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில், ஜூலை 12ல், 'ஹெரிடேஜ் அல்ட்ரா - 2026 மாரத்தான் போட்டி தொடர்பாக, தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., ரூபகலா பேசுகையில், ''தங்கவயல் நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகள் வழியாக, 3.5 கி.மீ., 5 கி.மீ., 12 கி.மீ., 40 கி.மீ., 50 கி.மீ., 70 கி.மீ. துார மாரத்தான் போட்டிகள் நடக்கவுள்ளது. ஓட்டபந்தயத்தில் அனுபவம் உள்ளவர்களுக்கும், மருத்துவப் பரிசோதனையில் தகுதி பெறுபவர்களுக்கு மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும். ''தங்கவயல் நகரம், விளையாட்டு வீரர்களுக்கு தாயகமாகத் திகழ்கிறது. விளையாட்டு நடவடிக்கைகளுக்கு ஏற்ற சூழலும் இங்கு நிலவுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ