உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  டூ -- வீலரில் வந்த முகமூடி கும்பல் பொதுமக்கள் மீது பயங்கர தாக்குதல்

 டூ -- வீலரில் வந்த முகமூடி கும்பல் பொதுமக்கள் மீது பயங்கர தாக்குதல்

பெங்களூரு: நகரில் இருசக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து வந்த ஆறு பேர், சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது அரிவாள், கத்தியலால் தாக்கி தப்பியோடினர். பெங்களூரு, உத்தரஹள்ளி பிரதான சாலை டிவைடரில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு, பொதுமக்களில் சிலர் நின்றிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனங்களில் மூகமுடி அணிந்து வந்த ஆறு பேர், அங்கிருந்த பொது மக்கள் மீது அரிவாள், கத்தியால் சரமாரியாக தாக்கினர். பின், அங்கிருந்து தப்பியோடிய மர்ம நபர்கள், அரஹள்ளி அருகில் சாலையோரத்தில் நின்றிருந்த சில பொது மக்களை தாக்கினர். இதனால் இரு சம்பவத்திலும் கிரண், ரவி, ராஜு, பாலசுப்பிரமணியம் உட்பட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். திடீரென நடந்த தாக்குதலால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், காயமடைந்தவர்களை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக, சுப்ரமண்யபுரா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள், விசாரணை நடத்தியதில், தாக்குதல் நடத்திய நான்கு பேரின் அடையாளம் தெரிந்தது. இதன் அடிப்படையில், அவர்களை கைது செய்ய மூன்று தனிப்படைகளை டி.சி.பி., சவுமியா லதா அமைத்து உள்ளார். இரவு நேரத்தில் பொது மக்கள் மீது நடத்திய தாக்குதலால் பீதியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி