உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நோய் பரவலை தடுக்க நடவடிக்கை

நோய் பரவலை தடுக்க நடவடிக்கை

சாய் லே: மழைநீர் தேங்கிய பகுதியில் நோய் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.பெங்களூரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில், ஹொரமாவு வார்டில் உள்ள சாய் லே - அவுட்டில் நீர் அதிகம் தேங்கியது. இதனால், கொசுக்கள் மூலம் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.இதை கருத்தில் கொண்ட மஹாதேவபுரா மண்டல கமிஷனர் கே.என்.ரமேஷ், நோய் பரவலை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்படி, நேற்று சுகாதாரத்துறை ஊழியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் கொண்ட குழு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில், 115 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. இரவில் கொசு மருந்து அடிக்கப்பட்டது; குடியிருப்பு வாசிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை