உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மெட்ரோ ரயில் ‘பிங்க்’ வழித்தடம் 8 நிமிட இடைவெளியில் இயக்கம்

மெட்ரோ ரயில் ‘பிங்க்’ வழித்தடம் 8 நிமிட இடைவெளியில் இயக்கம்

பெங்களூரு: மெட்ரோ ரயில் ‘பிங்க்’ வழித்தடத்தில் உச்ச நேரங்களில் எட்டு நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு காலேன அக்ரஹாரா முதல் தாவரகெரே வரை 7.50 கி.மீ., துாரத்துக்கு ‘பிங்க்’ வழித்தடத்தில், மெட்ரோ ரயில் சேவையை வரும் 13ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். முதல் கட்டமாக நான்கு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில் உச்ச நேரங்களில் ஐந்து நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்ற தகவலுக்கு மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். அதிகாரிகள் கூறுகையில், ‘எங்களால் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். ரயில்களை குறுகிய நேரத்திலும் இயக்க முடியும். ஆனால், காலேன அக்ரஹாரா – தாவரகெரே இடையே ரயில் பாதை குறுகிய தூரம் என்பதால், பயணியர் எண்ணிக்கை பொறுத்தே ரயில்கள் இயக்கப்படும் நேரம் முடிவு செய்யப்படும். எனவே, முதல் கட்டமாக உச்ச நேரங்களில் எட்டு நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது’ என்றனர். இந்நிலையில், பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டில், முதல்வர் சிவகுமாரை சந்தித்த வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், காலேன அக்ரஹாரா – நாகவாரா வழித்தடத்தில் வரும் கே.ஜி.ஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயரை ‘அரபி கல்லுாரி மெட்ரோ நிலையம்’ என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதற் கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பொது இடங்கள், ரயில் நிலையங்களுக்கு மத அடையாளங்களை பிரதிபலிக்கும் பெயர்களை வைக்க கூடாது என பல அமைப்பினர் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !