விஜயபுராவில் லேசான நிலநடுக்கம்
விஜயபுரா : விஜயபுரா மாவட்டத்தில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கர்நாடக மாநில இய ற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விஜயபுரா மாவட்டம், பசவன பாகேவாடி தாலுகா, மங்கோலி கிராமத்தில் நேற்று 2.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை உள்ளூர்வாசிகள் உணர்ந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் மிக குறைவு. இதனால், பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. மக்கள் யாரும் தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.