உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்., - சென்னை விரைவு சாலை பங்கார்பேட்டையில் மினி நகர்

பெங்., - சென்னை விரைவு சாலை பங்கார்பேட்டையில் மினி நகர்

பெங்களூரு : பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் வே காரிடாரில், பயணியர் ஓய்வு எடுத்து, பயணத்தை தொடரவும், உணவருந்தவும், பொழுது போக்கவும் பல்வேறு வசதிகள் கொண்ட, 'மினி நகர்' அமைக்கப்படவுள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: கோலார் மாவட்டம், பங்கார்பேட்டையின் ஐதான்டஹள்ளி அருகில் கடந்து செல்லும் பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் காரிடாரில், 30 ஏக்கரில், 'மினி நகர்' அமைக்கப்படும். இந்நகரை உருவாக்கும் பொறுப்பை, ஒய் - ஸ்பேஸ் நிறுவனம் ஏற்றுள்ளது. பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த காரிடாரில் பயணிப்போரின் வசதிக்காக, அமைக்கப்படும் மினி நகரில், புட் கோர்ட்கள், மால், பெட்ரோல் பங்க், இ - சார்ஜிங் மையம், ரெஸ்டாரென்ட், குழந்தைகள் விளையாட்டு மையம், ஹோட்டல், ரிசார்ட், பார்க்கிங் என, அனைத்தும் இருக்கும். உலகத்தரம் வாய்ந்த வசதிகள் செய்யப்படும். பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் காரிடார் நெடுகிலும், மூன்று இடங்களில், இத்தகைய வசதிகள் செய்ய, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம், ஒய் - ஸ்பேஸ் மற்றும் வி.எஸ்.இ.ஐ.எல்., நிறுவனங்கள் இணைந்து டெண்டர் பெற்றுள்ளன. தலா 30 ஏக்கர் பரப்பளவில், பங்கார்பேட்டை, சித்துார் மற்றும் காஞ்சிபுரத்தில் பல்வேறு வசதிகள் கொண்ட மினி நகர் அமைக்கப்படும். மேலும், நாட்டிலேயே மிக உயரமான 144.9 அடி உயரம் கொண்ட ஆஞ்ச நேயர் சிலையும் நிறுவப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி