குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆட்டோ ஓட்டுநர்கள் முடிவு
பெங்களூரு: ஆட்டோ காஸ் விலை உயர்வால், குறைந்தபட்ச கட்டணத்தை 50 ரூபாயாக உயர்த்த ஆட்டோ ஓட்டுநர்கள் முடிவு செய்து உள்ளனர். பெங்களூரில் ஆட்டோ காஸுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், எல்.பி.ஜி., காஸ் விலை உயர்த்தப்பட்டது. 65 ரூபாய்க்கு விற்பனையான ஒரு லிட்டர் எல்.பி.ஜி., தற்போது, 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில், 85 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, குறைந்தபட்ச கட்டணமான 36 ரூபாயை; 50 ரூபாயாக உயர்த்த ஆட்டோ ஓட்டுநர்கள் முடிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியுடன் பேச்சு நடத்த திட்டமிட்டு உள்ளனர்.