உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கோல்ட்ரிப் சிரப் பயன்பாடு அமைச்சர் மறுப்பு

கோல்ட்ரிப் சிரப் பயன்பாடு அமைச்சர் மறுப்பு

பெங்களூரு: ''கர்நாடகாவில் இருமல் மருந்தான கோல்ட்ரிப் சிரப் பயன்பாட்டில் இல்லை,'' என, சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறி உள்ளார். இது குறித்து நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடகாவில் அரசு மருத்துவமனைகளுக்கு, சுகாதார துறையின் மருந்து விநியோகக் கழகம் சார்பில், கோல்ட்ரிப் சிரப் சப்ளை செய்யப்படவில்லை. தனியார் மருந்து நிறுவனங்கள், அந்த சிரப்பை வாங்குகின்றனரா என்று சரிபார்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். இங்கு விநியோகிக்கப்படும் சில மருந்து நிறுவனங்களின் சிரப்புகளின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி