மேலும் செய்திகள்
எந்த சூழ்நிலையிலும் மின் தடை ஏற்படாது!
01-Mar-2025
பெங்களூரு: ''கோடை கால துவக்கத்தில், மின் பிரச்னைகள் குறித்து புகார்கள் எழலாம். மின் பற்றாக்குறை இருந்தாலும், விவசாயிகளுக்கு தினமும் ஏழு மணி நேரம் மின்சாரம் விநியோகிக்கப்படும்,'' என, மாநில மின்சாரத்துறை அமைச்சர் ஜார்ஜ், மேல்சபையில் தெரிவித்தார்.மேல்சபை கேள்வி நேரத்தில், காங்., உறுப்பினர் பசனகவுடா பாதர்லி சார்பில், சீனிவாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் ஜார்ஜ் கூறியதாவது:மாநிலத்தில் ஓரளவு மின் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகாவில் 19,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. தேவைக்கு தகுந்தபடி மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக ஏழு மணி நேரம் மின்சாரம் விநியோகிக்க முடியவில்லை என்றாலும், நான்கு மணி நேரம்; மூன்று மணி நேரம் என, இரண்டு கட்டங்களாக விநியோகிக்கிறோம்.இம்முறை மின் தேவை அதிகரிப்பதால், 56 துணை மின்நிலையங்கள் துவங்கி உள்ளோம். அடுத்த ஆண்டு 100 துணை மின் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ராய்ச்சூர், கலபுரகி பகுதிகளில் காலை நேரம் மின்சாரம் விநியோகிப்பதில் எங்களுக்கு பிரச்னை இல்லை; மாலையில் பிரச்னை ஏற்படுகிறது. எனவே 'கரண்ட் பம்ப் ஸ்டோரேஜ்' மற்றும் 'பேட்டரி ஸ்டோரேஜ்' வசதி செய்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
01-Mar-2025