மேலும் செய்திகள்
பெலகாவி பிரச்னையால் திசை மாறும் அரசியல்
26-Feb-2025
பெலகாவி : ஹனிடிராப் அரசியல் காரணங்கள் மட்டுமின்றி வணிக நோக்கங்களுக்காகவும் நடத்தப்படுவதாக மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி புதிய விளக்கம் அளித்துள்ளார்.பெலகாவி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான சதீஷ் ஜார்கிஹோளி நேற்று அளித்த பேட்டி:மஹாராஷ்டிராவின் எம்.இ.எஸ்., அமைப்பை தடை செய்தால் மட்டும் பிரச்னை தீர்ந்து விடாது. இந்த அமைப்புக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. காலப்போக்கில் தானாகவே அழிந்துவிடும்.இந்த அமைப்பை தடை செய்தால், வருங்காலத்தில் வேறு ஒரு பெயரில் அமைப்பை துவங்கி, போராட்டம் நடத்துவர். எல்லை பிரச்னை என்பது முடிந்து போன ஒன்று. 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை, தற்போது இல்லை.கர்நாடக அரசின் நலத்திட்டங்களால் மராத்தியர்களும் பயனடைகின்றனர். ஆனால், மஹாராஷ்டிரா அரசு, எல்லைப்பகுதியில் வசிக்கும் மராத்தியர்களுக்கு மட்டுமே வசதிகள் செய்து கொடுக்கிறது.கர்நாடக 'பந்த்' நடத்துவதில் ஆட்சேபனை எதுவும் இல்லை. போராட்டம் நடத்தவும், போராடவும் அனைவருக்கும் உரிமை உண்டு. இந்த போராட்டங்களால் மக்கள் கஷ்டப்படக்கூடாது.'ஹனிடிராப்' பிரச்னையை முதலில் எழுப்பியது நாங்கள் தான். இது முக்கிய புள்ளிகளை குறிவைத்து நடத்தப்படுகிறது. இது தொடர்பான விசாரணை குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் முதல்வர், உள்துறை அமைச்சர் கையில் உள்ளது. இதற்கு பின்னால் யார் உள்ளனர் என்பது தெரிய வேண்டும்.இது அரசியல் காரணங்களுக்காக மட்டும் நடப்பதில்லை. சில வணிக நோக்கங்களுக்காகவும் நடத்தப்படுகிறது. இதன் மூலம் 'பிளாக்மெயில்' செய்து பணம் பறிக்கும் வேலையும் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
26-Feb-2025