உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கபடி போட்டியில் பந்தயம் அமைச்சர் பரமேஸ்வர் தோல்வி

கபடி போட்டியில் பந்தயம் அமைச்சர் பரமேஸ்வர் தோல்வி

துமகூரு: கபடி விளையாட்டில் மாவட்ட கலெக்டருடன் பந்தயம் கட்டிய உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பணத்தை இழந்தார். துமகூரு நகரில் பி.யு.சி., கல்லுாரி மாணவர்களின், மாநில அளவிலான கபடி போட்டி நேற்று முன் தினம் நடந்தது. இறுதி ஆட்டத்தில், தட்சிண கன்னடா, விஜயபுரா அணிகள் மோதின. போட்டிகளை உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆர்வத்துடன் ரசித்தார். ஆட்டம் விறுவிறுப்பாக நடந்த போது, அமைச்சர் பரமேஸ்வர், விஜயபுரா அணி கோப்பையை வெல்லும் என, துமகூரு கலெக்டர் சுபா கல்யாணிடம், 500 ரூபாய் பந்தயம் கட்டினார். ஆனால் தட்சிண கன்னடா அணி வெற்றி பெற்று, கோப்பையை தட்டி சென்றது. பந்தயத்தில் தோற்றதால், கலெக்டருக்கு 500 ரூபாய் கொடுத்தார். இதுகுறித்து, பரமேஸ்வர் கூறியதாவது: கபடி போட்டியில் விஜயபுரா அணி வெற்றி பெறும் என, நான் கூறினேன். ஆனால் கலெக்டர் சுபா கல்யாண், தட்சிண கன்னடா அணியே வெற்றி பெறும் என்றார். இருவரும் பந்தயம் கட்டினோம். அவர் கூறியபடி தட்சிணகன்னடா அணி வெற்றி பெற்றது. பந்தயத்தில் நான் தோற்றதால், 500 ரூபாயை இழந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி