உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெலகாவி மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் அமைச்சர் சதீஷ் வலியுறுத்தல்

 பெலகாவி மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் அமைச்சர் சதீஷ் வலியுறுத்தல்

பெலகாவி: ''பெலகாவி மாவட்டத்தை பிரிப்பது தொடர்பாக, முதல்வர் சித்தராமையா விரைவில் முடிவு எடுக்க வேண்டும்,'' என, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறினார். பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி: பெலகாவி மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என, ஏற்கனவே பலமுறை முதல்வர் சித்தராமையாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். முதல்வர் விரைவில் முடிவு எடுக்க வேண்டும். பெலகாவி மாவட்டத்தின் மேம்பாட்டுக்கு, பட்ஜெட் நிதிக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தந்த துறைகளில் இருப்புள்ள நிதியை பயன்படுத்தி, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளலாம். போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல், அசோக் சதுக்கம், சென்னம்மா சதுக்கம், கொல்லாபுரா சதுக்கம் மேம்படுத்தப்படும். வரும் கிராம பஞ்சாயத்து தேர்தல்களில், ஓட்டுச்சீட்டு பயன்படுத்த, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை