உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அமைச்சர் டி.சுதாகருக்கு திடீர் உடல்நலக்குறைவு 

 அமைச்சர் டி.சுதாகருக்கு திடீர் உடல்நலக்குறைவு 

பெங்களூரு: அமைச்சர் டி.சுதாகருக்கு திடீர் உடல்குறைவு ஏற்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கர்நாடக திட்டம் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் டி.சுதாகர், 65. இவர், சித்ரதுர்கா ஹிரியூர் தொகுதி எம்.எல்.ஏ., ஆவார். பெங்களூரு யஷ்வந்த்பூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். நேற்று மாலை இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுவிட முடியாமல் கஷ்டப்பட்டார். அவரை குடும்பத்தினர், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நுரையீரல் தொற்று ஏற்பட்டது தெரிந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை