உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தேவையின்றி சிசேரியன் அமைச்சர் எச்சரிக்கை

 தேவையின்றி சிசேரியன் அமைச்சர் எச்சரிக்கை

பெலகாவி: ''பணம் வசூலிக்கும் நோக்கில், கர்ப்பிணியருக்கு தேவையின்றி ஆப்பரேஷன் மூலம் பிரசவம் நடத்தும் தனியார் மருத்துவமனைகளின் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் எச்சரித்தார். மேல்சபை கேள்வி நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் கோவிந்தராஜுவின் கேள்விக்கு பதில் அளித்து, அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது: கர்ப்பிணியருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தும் போதும், பிரசவம் பார்க்கும் போதும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும். மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணியருக்கு அவசியமாக இருந்தால் மட்டுமே, ஆப்பரேஷன் செய்ய வேண்டும். பணம் வசூலிக்கும் நோக்கில் தேவையின்றி, ஆப்பரேஷன் செய்து பிரசவம் பார்க்க கூடாது. இது குறித்து புகார்கள் வரவில்லை. ஒருவேளை புகார் வந்தால், தனியார் மருத்துவமனைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ