உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஏ.ஐ.,யால் வேலையிழப்பு தடுக்க அமைச்சர் திட்டம்

ஏ.ஐ.,யால் வேலையிழப்பு தடுக்க அமைச்சர் திட்டம்

பெங்களூரு : ஐ.டி., நிறுவனங்களில் ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அந்நிறுவனங்களுடன் இணைந்து மாநில அரசு ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். பெங்களூரு ஐ.டி., நிறுவனங்களில், சமீப காலமாக ஏ.ஐ.,யால் வேலை இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதை சமாளிக்க கர்நாடகாவின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே திட்டமிட்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று பெங்களூரில் கூறியதாவது: ஐ.டி., நிறுவனங்களில் ஏ.ஐ.,யால் எப்படி வேலை இழப்புகள் ஏற்படுகின்றன? இதை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்? வேலைவாய்ப்பை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஐ.டி., நிறுவனங்களுடன் இணைந்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பின் மூலம் ஏ.ஐ.,யின் தாக்கம் குறித்து கண்டறியப்படும். இதன் மூலம் ஊழியர்கள் தங்கள் தகுதியை காலத்திற்கேற்ப உயர்த்திக் கொள்ள முடியும். அடுத்த மாதத்திற்குள் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும். கர்நாடகாவில் ஐ.டி., துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு என, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் கிடையாது. இருப்பினும், ஊழியர்களின் பிரச்னைகளுக்கு அரசு தீர்வு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை