உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தங்கவயலில் வளர்ச்சி பணிகள் எம்.எல்.ஏ., ரூபகலா அதிருப்தி

தங்கவயலில் வளர்ச்சி பணிகள் எம்.எல்.ஏ., ரூபகலா அதிருப்தி

தங்கவயல்: ‘‘தங்கவயல் நகரின் வளர்ச்சிக்காக பெரும் முயற்சி எடுத்து அரசிடம் நிதி பெற்றுத் தந்தும், உரிய முறையில் நகரில் வளர்ச்சிப் பணிகள் நடக்கவில்லை,’’ என, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா அதிருப்தி தெரிவித்தார். தங்கவயல் நகராட்சி கூட்ட அரங்கில், நேற்று நகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: சமீபத்தில் முதல்வரின் சிறப்பு நிதியிலிருந்து, 10 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளேன். இந்த நிதியில், நகரின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். எனினும், எதிர்பார்த்த அளவிற்கு பணிகள் நடக்கவில்லை. இது தொடர்பாகப் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன. உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பெரும்பாலான பணிகள், உள்ளூர்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், பணிகள் சரிவர நிறைவேற்றப்படவில்லை. அதிகாரிகளும் பணிகளை முறையாகக் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !