மேலும் செய்திகள்
ஒக்கலிகர் எம்.எல்.ஏ.,க்கள் இன்று ஆலோசனை கூட்டம்
15-Apr-2025
பெங்களூரு: ''ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையால் ஒக்கலிகர்களுக்கு அநீதி நடந்தால், பதவியை ராஜினாமா செய்வேன்,'' என்று, அரகலகூடு ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சு கூறினார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை மத்திய அரசு தான் நடத்த வேண்டும். மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இவர்களுக்கு யார் கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் கொடுத்தது. நாற்காலியை தக்க வைத்து கொள்வதற்காக, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட பார்க்கின்றனர். இதை நாங்கள் கண்டிப்பாக ஏற்று கொள்ள மாட்டோம்.இந்த அறிக்கையால் ஒக்கலிகர்களுக்கு அநீதி நடந்தால், எனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வேன். எங்கள் சமூகத்திற்கு அநீதி நடப்பதை பார்த்து கொண்டு அமைதியாக இருக்க மாட்டேன்.அனைத்து கட்சி எம்.எல்.ஏ., க்களும் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கைக்கு எதிராக ஒற்றுமையாக குரல் எழுப்ப வேண்டும்.ஜெயபிரகாஷ் ஹெக்டே எனது வீட்டிற்கு வந்து எந்த கணக்கெடுப்பும் நடத்தவில்லை. 'ஏசி' அறையில் அமர்ந்து அவர்கள் தயாரித்த அறிக்கையை நாங்கள் ஏற்க வேண்டுமா. அறிக்கைக்கு அரசு ஒப்புதல் அளித்தால், வரும் நாட்களில் கடும் போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
15-Apr-2025