மேலும் செய்திகள்
சிறுமியின் குடலில் சிக்கிய சேப்டி பின் அகற்றம்
26-Jun-2025
ஷிவமொக்கா: சிறையில் உள்ள தண்டனை கைதியின் வயிற்றில் இருந்து ஒரு அங்குலம் அகலம், மூன்று அங்குல நீளத்தில் இருந்த மொபைல் போனை அகற்றிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.ஷிவமொக்காவை சேர்ந்தவர் தவுலத், 30. குற்ற வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர். ஜூன் 24ம் தேதி, வயிறு வலிப்பதாக, சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கான மருந்து கொடுக்கப்பட்டது. ஆனாலும், வலி நிற்கவில்லை. அதன் பின்னர், கல்லை விழுங்கியதாக தவுலத் தெரிவித்தார். 'எக்ஸ்ரே' எடுத்து பார்த்த போது, வயிற்றில் ஏதோ பொருள் இருப்பது தெரிந்தது.அவரை நகரில் உள்ள மெக்கான் மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். வயிற்றில், ஒரு அங்குலம் அகலம், மூன்று அங்குலம் நீளத்தில் பட்டன் மொபைல் போன் இருந்ததை பார்த்து அதிர்ந்தனர்.அதே போன்று, சிறை துறை போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த சிறை சூப்பிரண்டு ரங்கநாத், துங்காநகர் போலீசில் புகார் செய்துள்ளார். சிறைக்குள் மொபைல் போன் எப்படி செல்கிறது என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.இதுபோன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன், சிறை கைதி ஒருவரின் வயிற்றில் இருந்து, மெக்கான் மருத்துவமனை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம், மொபைல் போனை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
26-Jun-2025