உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மொபைல் போனை எடுத்து சென்ற குரங்கால் பரபரப்பு

மொபைல் போனை எடுத்து சென்ற குரங்கால் பரபரப்பு

ஷிவமொக்கா: ஷிவமொக்கா நகரில் குவெம்பு சாலையில் உள்ள நஞ்சப்பா மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் ரேஷ்மா. நேற்று காலை ஜன்னல் அருகில், மேஜையில் மொபைல் போனை வைத்து பணியாற்றி கொண்டிருந்தார்.அப்போது ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த குரங்கு, அவரின் மொபைல் போனை எடுத்து கொண்டு ஓடியது. அதிர்ச்சியடைந்த ரேஷ்மா, மருத்துவமனை செக்யூரிட்டிகளிடம் தெரிவித்தார். கையில் குச்சியுடன் செக்யூரிட்டிகள் வருவதை பார்த்த குரங்கு, அருகில் உள்ள மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டது.மரத்தின் அருகில் வாழைப்பழங்கள் வைத்தனர். பழத்தை எடுத்து கொண்ட குரங்கு, மொபைல் போனை வைத்து விட்டு சென்றது. இதனால் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை